நிதானமாகவும் உங்களுக்கு வசதியான நேரத்திலும் மாற்றங்களை நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ள உங்களுக்குப் போதுமான நேரம் வழங்குவதற்காக, நடைமுறைப்படுத்தும் தேதியை மே 15 வரை நீட்டித்துள்ளோம். அதற்குள் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், உங்கள் கணக்கை WhatsApp நீக்காது. இருப்பினும், நீங்கள் ஏற்றுக்கொள்ளும் வரை WhatsApp-இல் உள்ள எல்லா அம்சங்களையும் உங்களால் பயன்படுத்த முடியாது. ஒரு குறுகிய காலக்கட்டத்திற்கு, அழைப்புகளையும் அறிவிப்புகளையும் பெறுவீர்கள். ஆனால் செயலியின் வழியாகச் செய்திகளை அனுப்ப முடியாது அல்லது படிக்க முடியாது.
உங்களுக்கான தேர்வுகள்:
- மே 15ஆம் தேதிக்குப் பிறகும்கூட புதுப்பிப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.
- மே 15ஆம் தேதிக்கு முன், உங்கள் அரட்டை வரலாற்றை Android அல்லது iPhone சாதனத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம் மற்றும் உங்கள் கணக்கின் அறிக்கையைத் தரவிறக்கிக் கொள்ளலாம். Android, iPhone அல்லது KaiOS மொபைல்களில் உங்கள் கணக்கை நீக்க விரும்பினால் அதுகுறித்து நீங்கள் மீண்டும் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறோம். உங்கள் செய்தி வரலாற்றை அழித்துவிட்டு, உங்களின் எல்லா WhatsApp குழுக்களிலிருந்தும் உங்களை நீக்கிவிட்டு, உங்கள் WhatsApp காப்புப்பிரதிகளை நீக்கிவிடும் என்பதால், அதன்பிறகு எங்களால் எதுவும் செய்ய இயலாது.
- உங்கள் கணக்கின் அறிக்கையைத் தரவிறக்குவதற்கோ உங்கள் கணக்கை நீக்குவதற்கோ உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், எங்களை இங்கே தொடர்பு கொள்ளலாம். தனியாக, செயலில் இல்லாத பயனர்கள் தொடர்பான எங்களின் கொள்கை பொருந்தும்.