தொடர்புப் பதிவேற்றம் குறித்து
தொடர்புப் பதிவேற்றம் என்பது ஒரு விருப்ப அம்சமாகும். உங்கள் சாதனத்தின் முகவரிப் புத்தகத்தில் உள்ள உங்கள் தொடர்புகளில் யாரெல்லாம் WhatsApp பயனர்கள் என்பதை அடையாளம் காண எங்களை இது அனுமதிக்கிறது. இதன்மூலம் அவர்களை உங்கள் WhatsApp தொடர்புகளில் எங்களால் சேர்க்க இயலும். மேலும், உங்கள் தொடர்புகளில் உள்ள WhatsApp பயன்படுத்தாத நபர்கள் பின்னர் பதிவுசெய்தால், அவர்களையும் உங்கள் WhatsApp தொடர்புகளில் விரைவாகச் சேர்க்க இயலும். Facebook உடன் உங்கள் தொடர்புகளை WhatsApp பகிராது என்பதை நன்றாகக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் சாதனத்தில் உள்ள WhatsApp பதிப்பானது உங்கள் சாதனத்தின் முகவரிப் புத்தகத்திலிருந்து உங்கள் WhatsApp தொடர்புகளுக்கான பெயர்களைக் காண்பிக்கும். இதன் மூலம் நீங்கள் அவர்களை எளிதாகத் தொடர்புகொள்ள முடியும்.
தொடர்புப் பதிவேற்ற அம்சத்தைப் பயன்படுத்தி, உங்கள் சாதனத்தின் முகவரிப் புத்தகத்திற்கான அணுகலை நீங்கள் WhatsApp-க்கு வழங்கும்போது, உங்கள் முகவரிப் புத்தகத்தில் உள்ள தொலைபேசி எண்களை அவ்வப்போது WhatsApp அணுகும், பதிவேற்றும். இதில் WhatsApp பயனர்களும் உங்கள் பிற தொடர்புகளும் அடங்கும். உங்கள் தொடர்புகள் யாரும் இதுவரை WhatsApp-ஐப் பயன்படுத்தவில்லை எனில், பயனர் அல்லாத தொடர்புகளை அடையாளம் காண முடியாததை உறுதிப்படுத்தும் வகையில் இந்தத் தகவலை உங்களுக்காக நிர்வகிப்போம். இந்த மொபைல் எண்களை நாங்கள் சேமிக்க மாட்டோம், கிரிப்டோகிராஃபிக் ஹாஷ் மதிப்புகளை உருவாக்குவதற்கு மட்டுமே அவற்றைச் சிறிது நேரம் செயலாக்குவோம். WhatsApp-இல் அவர்கள் இணைந்தால் இந்தத் தொடர்புகளுடன் உங்களை இணைக்க எங்களுக்கு இது உதவும். உங்கள் சாதன அடிப்படையிலான அமைப்புகளிலிருந்து தொடர்புப் பதிவேற்ற அம்சத்தை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.