Meta நிறுவனங்களுடன் WhatsApp என்னென்ன தகவல்களைப் பகிர்கிறது?

குறிப்பிட்ட வகைகளிலான தகவல்களை WhatsApp தற்போது Meta நிறுவனங்களுடன் பகிர்கிறது. மற்ற Meta நிறுவனங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் அடங்குபவை: உங்கள் கணக்கின் பதிவுத் தகவல் (எ.கா. உங்கள் மொபைல் எண்), பரிவர்த்தனைத் தரவு (எ.கா. WhatsApp இல் நீங்கள் Facebook Pay அல்லது ஷாப்களைப் பயன்படுத்தினால்), சேவை தொடர்பான தகவல்கள், எங்கள் சேவைகளைப், பயன்படுத்தும்போது பிசினஸ்களுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்கள், மொபைல் சாதனத் தகவல், உங்கள் IP முகவரி, தனியுரிமைக் கொள்கையில் 'நாங்கள் சேகரிக்கும் தகவல்' என்ற பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது உங்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகோ உங்கள் ஒப்புதலின் அடிப்படையிலோ பெறப்பட்ட பிற தகவல்கள்.
Meta உடன் நாங்கள் பகிரும் தகவல்களை முக்கியமான வழிகளில் கட்டுப்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, உங்களுக்கிடையிலான தனிப்பட்ட உரையாடல்களை முழு மறையாக்கத்துடன் எப்போதும் பாதுகாப்போம். இதன்மூலம் WhatsApp அல்லது Meta ஆல் கூட இந்தத் தனிப்பட்ட மெசேஜ்களைப் பார்க்க முடியாது. ஒருவர் யாருக்கெல்லாம் மெசேஜ் அனுப்புகிறார், யாரையெல்லாம் அழைக்கிறார் என்கிற பதிவுகளை நாங்கள் வைத்திருப்பதில்லை, நீங்கள் பகிரும் இருப்பிடத்தை எங்களால் பார்க்க முடியாது. இதனால் இவற்றை நாங்கள் Meta உடன் பகிர்வதில்லை, எங்களால் பகிரவும் முடியாது. சேவைகளை வழங்குவதற்கு எங்களுக்கு உங்கள் தொடர்புகள் தேவை, ஆனால் உங்கள் தொடர்புகளை Meta உடன் நாங்கள் பகிர மாட்டோம். இந்தக் கட்டுப்பாடுகளில் சிலவற்றைப் பற்றி இங்கே மேலும் அறிந்துகொள்ளலாம்.
இது உதவிகரமாக இருந்ததா?
ஆம்
இல்லை