WhatsApp இன் தனியுரிமைக் கொள்கை குறித்த உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்

சமீபத்தில் தனியுரிமைக் கொள்கையில் சில மாற்றங்களைச் செய்துள்ளோம், அது தொடர்பாகச் சிந்தனைப்பூர்வமான பல கேள்விகளும் எங்களுக்கு வந்துள்ளன. சில வதந்திகள் பரவி வரும் காரணத்தால், அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக, எங்களுக்கு வந்துள்ள பொதுவான சில கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்புகிறோம். மக்கள் தங்களுக்கிடையே தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ள உதவும் வகையில் WhatsApp செயலியை உருவாக்க நாங்கள் பெருமுயற்சி எடுத்து வருகிறோம்.
கொள்கை மாற்றம் காரணமாக, உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனான உங்கள் மெசேஜ்களின் தனியுரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதை உங்களுக்குத் தெளிவாகக் கூற விரும்புகிறோம். இந்த மாற்றங்கள் WhatsApp இல் உள்ள விருப்பத்தேர்விலான பிசினஸ் அம்சங்கள் தொடர்பானவை. மேலும், தரவை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் ஆகியவை தொடர்பான கூடுதல் வெளிப்படைத்தன்மையை இவை வழங்குகின்றன. பிசினஸ் தொடர்பான புதிய அம்சங்கள் குறித்தும், WhatsApp இன் தனியுரிமைக் கொள்கையின் புதுப்பித்தல் குறித்தும் இங்கே மேலும் அறிக.
உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் தொடர்பான தனியுரிமையும் பாதுகாப்பும்
உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை எங்களால் பார்க்க முடியாது, உங்கள் அழைப்புகளைக் கேட்கவும் முடியாது, Facebook நிறுவனத்தாலும் இவற்றைச் செய்ய முடியாது: WhatsApp நிறுவனத்தாலும் Facebook நிறுவனத்தாலும் WhatsApp இல் உள்ள உங்கள் மெசேஜ்களைப் படிக்க முடியாது, உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், சக ஊழியர்களுடனான அழைப்புகளைக் கேட்க முடியாது. நீங்கள் பகிரும் அனைத்தும் உங்களுக்கிடையே மட்டுமே இருக்கும். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் முழு மறையாக்கத்துடன் பாதுக்காக்கப்படுவதால் வேறு எவராலும் அவற்றை அணுக முடியாது. நாங்கள் ஒருபோதும் இந்தப் பாதுகாப்பைப் பலவீனப்படுத்த மாட்டோம், ஒவ்வொரு அரட்டைக்கும் தெளிவாக லேபிளிடுவதால், எங்கள் அர்ப்பணிப்பில் எவ்வித சமரசமும் செய்யமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். WhatsApp பாதுகாப்பு பற்றி இங்கே மேலும் அறிக.
மெசேஜ்களை அனுப்புபவர்கள் அல்லது அழைப்பாளர்கள் குறித்த எந்தப் பதிவுகளையும் நாங்கள் சேமிப்பதில்லை: மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களும் ஆப்பரேட்டர்களும் இந்தத் தகவலைச் சேமித்து வைப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தாலும், இருநூறு கோடி பயனர்களுக்கான இந்தப் பதிவுகளை வைத்திருப்பது தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் இருப்பதாக நாங்கள் நம்புவதால், அவ்வாறு செய்ய மாட்டோம்.
நீங்கள் பகிர்ந்த இருப்பிடங்களை எங்களால் பார்க்க முடியாது, Facebook நிறுவனத்தாலும் இதைச் செய்ய முடியாது: WhatsApp இல் உங்கள் இருப்பிடத்தை ஒருவருடன் நீங்கள் பகிரும்போது, உங்கள் இருப்பிடத் தகவலை முழு மறையாக்கம் செய்து பாதுகாக்கிறோம். அதாவது, யாருடன் உங்கள் இருப்பிடத்தைப் பகிர்கிறீர்களோ அவர்களைத் தவிர வேறு யாராலும் அதைப் பார்க்க முடியாது.
உங்கள் தொடர்புகளை Facebook உடன் நாங்கள் பகிர மாட்டோம்: உங்கள் முகவரிப் புத்தகத்தை அணுக எங்களுக்கு நீங்கள் அனுமதி வழங்கும்போது, மெசேஜை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் அனுப்பும் நோக்கில் அதிலுள்ள மொபைல் எண்களை மட்டுமே அணுகுவோம். Facebook நிறுவனம் வழங்கும் பிற செயலிகளுடன் உங்கள் தொடர்புகளின் பட்டியல்களை நாங்கள் பகிர மாட்டோம்.
குழுக்கள் தொடர்ந்து தனிப்பட்டதாகவே பராமரிக்கப்படும்: மெசேஜ்களை வழங்கவும், ஸ்பேம் மற்றும் முறைகேடான பயன்பாட்டில் இருந்து எங்கள் சேவையைப் பாதுகாக்கவும் குழு மெம்பர்ஷிப்பைப் பயன்படுத்துகிறோம். விளம்பர நோக்கங்களுக்காக இந்தத் தரவை நாங்கள் Facebook உடன் பகிர மாட்டோம். தனிப்பட்ட அரட்டைகள் அனைத்தும் முழு மறையாக்கத்துடன் பாதுகாக்கப்படுவதால், அவற்றின் உள்ளடக்கத்தை எங்களால் பார்க்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் மெசேஜ்களை மறையச் செய்யுமாறு அமைக்கலாம்: கூடுதல் தனியுரிமைக்காக, மெசேஜ்களை நீங்கள் அனுப்பியபிறகு, அரட்டையில் இருந்து அவற்றை மறையச் செய்யுமாறு நீங்கள் அமைத்துக் கொள்ளலாம். எங்களின் இந்த உதவி மையக் கட்டுரையில் மேலும் அறிந்திடுங்கள்.
உங்கள் தரவைத் தரவிறக்கிக் கொள்ளலாம்: உங்கள் கணக்கில் என்னென்ன தகவல்களை நாங்கள் வைத்திருக்கிறோம் என்பதைச் செயலில் இருந்தே நீங்கள் தரவிறக்கிப் பார்த்துக் கொள்ளலாம். எங்களின் இந்த உதவி மையக் கட்டுரையில் மேலும் அறிந்திடுங்கள்.
பிசினஸ் மெசேஜிங் சேவையும் Facebook உடன் நாங்கள் பணியாற்றும் விதமும்
ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் உள்ள லட்சக் கணக்கான மக்கள் அனைத்து விதமான பிசினஸ்களுடன் WhatsApp வழியாகப் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்கிறார்கள். பிசினஸ்களுடன் நீங்கள் தொடர்புகொள்ளத் தேர்வு செய்வீர்கள் எனில், நாங்கள் இதை உங்களுக்குச் சுலபமாகவும் சிறப்பாகவும் செய்து தருவோம். இந்த அம்சங்களைப் பயன்படுத்தும் எந்தவொரு பிசினஸுடனும் நீங்கள் தொடர்புகொள்ளும்போது WhatsApp செயலியில் அதை நாங்கள் தெளிவாகச் செய்து தருவோம்.
Facebook இன் ஹோஸ்ட்டிங் சேவைகள்: பிசினஸ்களுக்கு மெசேஜ் அனுப்புவதும், உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவதும் ஒன்றல்ல. சில பெரிய பிசினஸ்கள், தங்களின் தகவல் தொடர்பை நிர்வகிக்க ஹோஸ்டிங் சேவைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்தக் காரணத்தாலேயே, பிசினஸ்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடனான WhatsApp உரையாடல்களை நிர்வகிக்கவும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், பயனுள்ள தகவல்களை அனுப்பவும் (பொருள் வாங்கியதற்கான ரசீதுகள் போன்றவை) Facebook வழங்கும் பாதுகாப்பான ஹோஸ்ட்டிங் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தேர்வை நாங்கள் பிசினஸ் நிறுவனங்களுக்கு வழங்குகிறோம். ஆனால், நீங்கள் ஒரு பிசினஸுடன் தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது WhatsApp என எப்படித் தொடர்பு கொண்டாலும், உங்கள் மெசேஜ்களை அவர்களால் பார்க்க முடியும். அந்தத் தகவல்களைத் தங்கள் சொந்த சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக (Facebook இல் விளம்பரப்படுத்தல் உள்பட) அவர்கள் பயன்படுத்தக்கூடும். இது குறித்த தகவல்களை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிசெய்யும் நோக்கில், Facebook வழங்கும் ஹோஸ்ட்டிங் சேவைகளைப் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கும் பிஸினஸ்களுடனான உரையாடல்களுக்குத் தெளிவாக லேபிள் வழங்குகிறோம்.
ஒரு பிசினஸைத் தேடுவது: WhatsApp ஐப் பயன்படுத்தி ஒரு பிசினஸுக்கு மெசேஜ் அனுப்ப, Facebook இல் ஒரு பொத்தானுடன் கூடிய விளம்பரத்தை நீங்கள் பார்க்கக்கூடும். உங்கள் மொபைலில் WhatsApp செயலியை நிறுவியிருந்தால், அந்த பிஸினஸுக்கு மெசேஜ் அனுப்புவதற்கான விருப்பத்தேர்வை நீங்கள் காணலாம். Facebook இல் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க, இந்த விளம்பரங்களுடன் நீங்கள் எப்படியெல்லாம் ஊடாடுகிறீர்கள் என்பது குறித்த தகவல்களை Facebook பயன்படுத்தக்கூடும்.
WhatsApp இல் பேமெண்ட்கள்: WhatsApp இன் UPI இயக்கப்பட்ட பேமெண்ட்களை நிர்வகிப்பதற்கென்றே தனிப்பட்டதொரு தனியுரிமைக் கொள்கை உள்ளது, அதை நீங்கள் இங்கே அணுகலாம், இந்தப் புதுப்பிப்பு இதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
இது உதவிகரமாக இருந்ததா?
ஆம்
இல்லை