Facebook நிறுவனங்களுடன் நாங்கள் எவ்வாறு பணியாற்றுகிறோம்

This article has been archived. Please see up-to-date content in our Privacy Policy.
ஐரோப்பியப் பகுதியில் உள்ள பயனர்களுக்கான கூடுதல் தகவல்களை இந்தக் கட்டுரையில் வழங்கியுள்ளோம்.
எவையெல்லாம் Facebook நிறுவனங்கள்?
Facebook நிறுவனங்களில் ஒன்று WhatsApp ஆகும். Facebook நிறுவனங்களில், பிற நிறுவனங்களையும் சேர்த்து, Facebook, Facebook Technologies, WhatsApp ஆகிய நிறுவனங்களும் அடங்கும். இவை அனைத்தும் இணைந்து Facebook நிறுவனத் தயாரிப்புகளை வழங்குகின்றன.
WhatsApp ஏன் Facebook நிறுவனங்களுக்குத் தகவல்களைப் பகிர்கிறது?
WhatsApp சேவைகளை நாங்கள் வழங்குவதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும், WhatsApp மற்றும் பிற Facebook நிறுவனங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும் எங்களுக்கு உதவக்கூடிய உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், சிஸ்டம்கள் போன்ற சேவைகளைப் பெற, மற்ற Facebook நிறுவனங்களுடன் WhatsApp இணைந்து பணியாற்றி தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது. Facebook நிறுவனங்களிடமிருந்து சேவைகளை நாங்கள் பெறும்போது, நாங்கள் அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள், எங்களின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க WhatsApp-க்கு உதவுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இணைந்து பணியாற்றுவதால், பின்வருவனவற்றை எங்களால் செய்ய முடிகிறது:
  • உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்குச் செய்திகளையும் அழைப்புகளையும் விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கி எங்களுடைய சேவைகள் மற்றும் அம்சங்களின் செயல்திறனைப் புரிந்துகொள்ளுதல்.
  • ஸ்பேம் கணக்குகளை நீக்கியும், முறைகேடான செயல்பாடுகளை எதிர்த்துப் போராடியும் WhatsApp மற்றும் Facebook நிறுவனத் தயாரிப்புகள் முழுவதிலும் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்தல்.
  • உங்கள் WhatsApp அனுபவத்தை Facebook நிறுவனத் தயாரிப்புகளுடன் இணைத்தல்.
இன்றளவில், உங்கள் Facebook தயாரிப்பு அனுபவங்களை மேம்படுத்துவதற்கோ Facebook-இல் மேலும் தொடர்புடைய Facebook விளம்பர அனுபவங்களை உங்களுக்கு வழங்குவதற்கோ உங்கள் WhatsApp கணக்குத் தகவல்களை Facebook பயன்படுத்துவதில்லை. WhatsApp மற்றும் மற்ற Facebook நிறுவனத் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்துவதற்குப் பல புதிய வழிகளை உருவாக்குவதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நாங்கள் வழங்கும் புதிய அம்சங்கள் தொடர்பாகவும், தரவை நாங்கள் பயன்படுத்தும் நடைமுறைகள் தொடர்பாகவும் உங்களுக்குத் தொடர்ந்து அறிவிப்போம்.
Facebook நிறுவனங்களுடன் WhatsApp என்னென்ன தகவல்களைப் பகிர்கிறது?
Facebook நிறுவனங்களிடமிருந்து சேவைகளைப் பெறும் நோக்கில், தனியுரிமைக் கொள்கையில் உள்ள "நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்” எனும் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள தகவல்களை WhatsApp பகிர்ந்து கொள்கிறது. உதாரணத்திற்கு, பகுப்பாய்வுச் சேவைகளுடன் சேர்த்து WhatsApp-ஐ உங்களுக்கு வழங்க, WhatsApp-இல் நீங்கள் பதிவுசெய்தபோது நீங்கள் சரிபார்த்த மொபைல் எண், உங்கள் சாதனத்தின் சில தகவல்கள், உங்கள் உபயோகம் தொடர்பான சில தகவல்கள் ஆகியவற்றை WhatsApp-இன் சார்பாகவும், எங்கள் வழிகாட்டுதல்களின்படியும் Facebook செயலாக்குகிறது. உங்கள் சாதனத்தின் தகவல்களில் இடம்பெறுபவை: ஒரே சாதனம் அல்லது கணக்குடன் தொடர்புடைய உங்கள் சாதன அடையாளங்காட்டிகள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு எண், செயலியின் பதிப்பு, இயங்குதளத்தின் தகவல், உங்கள் மொபைல் எண்ணுக்கான நாட்டின் குறியீடு, நெட்வொர்க் குறியீடு, புதுப்பிப்புகளை ஏற்றுக்கொள்வது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேர்வுகளைக் கண்காணிப்பதற்கான நிலைகள் போன்றவை. உங்கள் உபயோகத் தகவல்களில் இடம்பெறுபவை: WhatsApp-ஐ நீங்கள் கடைசியாகப் பயன்படுத்திய தேதி, உங்கள் கணக்கை முதலில் பதிவுசெய்த தேதி, எந்த வகையான அம்சங்களை உபயோகித்தீர்கள், எவ்வளவு கால இடைவெளியில் அவற்றை உபயோகித்தீர்கள் போன்றவை.
Facebook நிறுவனங்கள் முழுவதிலும் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் தேவை ஏற்படும் நோக்கில் மற்ற Facebook நிறுவனங்களுடனும் தகவல்களை WhatsApp பகிர்ந்து கொள்கிறது. குறிப்பிட்ட ஒரு WhatsApp பயனர் Facebook நிறுவனத்தின் பிற தயாரிப்புகளையும் பயன்படுத்துகிறாரா என்பதைத் தீர்மானிப்பதற்கும், அந்த Facebook நிறுவனங்கள் அதுபோன்ற பயனர்களுக்கு எதிராக அல்லது அவர்களைப் பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா என முடிவெடுப்பதற்கும், Facebook மற்றும் பிற Facebook நிறுவனங்களை அனுமதிக்கச் செய்யும் தகவல் பகிர்தல் விருப்பம் இதில் அடங்கும். உதாரணத்திற்கு, Facebook-இல் அடையாளம் காணப்பட்ட ஒரு ஸ்பேமருக்கு எதிராக Facebook நடவடிக்கை எடுக்க இயலச் செய்யத் தேவையான தகவலை WhatsApp பகிரலாம். நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள், WhatsApp-இல் பதிவுசெய்தபோது அவர்கள் சரிபார்த்த மொபைல் எண் அல்லது அதே சாதனம் அல்லது கணக்குடன் தொடர்புடைய சாதன அடையாளங்காட்டிகள் போன்ற தகவல்கள் இதில் அடங்கும். தனியுரிமைக் கொள்கையில் உள்ள "தரவை செயலாக்குவதற்கான சட்ட அடிப்படைகள்” பிரிவுக்கு இணங்க இதுபோன்ற தகவல்கள் பரிமாற்றப்படும்.
Facebook நிறுவனங்கள் எனது WhatsApp தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகின்றன?
  • WhatsApp இயங்குவதற்கும், அதை மேம்படுத்துவதற்கும், எங்கள் பிசினஸை வளர்ப்பதற்கும் உதவும் சேவைகளைப் பெறுவதற்கு. இதுபோன்ற வழிகளில் Facebook நிறுவனங்களுடன் தகவல்களை WhatsApp பகிரும்போது, Facebook நிறுவனங்கள் சேவை வழங்குநர்களாகச் செயல்படுகின்றன, எங்கள் வழிகாட்டுதல்களுக்கு இணங்க WhatsApp-க்கு உதவ நாங்கள் அவர்களுடன் பகிரும் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    • சேவை வழங்குநர்களாக நாங்கள் மற்ற Facebook நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், சிஸ்டம்கள், கருவிகள், தகவல்கள், நிபுணத்துவம் போன்றவற்றை WhatsApp போன்ற நிறுவனங்களுக்குச் சேவை வழங்குநர்கள் வழங்கி, எங்கள் பயனர்களுக்கு WhatsApp சேவையை வழங்குவதிலும் அவற்றை மேம்படுத்துவதிலும் எங்களுக்கு உதவுகின்றனர்.
    • உதாரணத்திற்கு, எங்கள் சேவைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்கும், Facebook நிறுவனங்களிடையே எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஒப்பிடுவதற்கும் இது எங்களை இயலச் செய்கிறது. WhatsApp-இல் பதிவுசெய்தபோது நீங்கள் சரிபார்த்த மொபைல் எண், கடைசியாக உங்கள் கணக்கு பயன்படுத்தப்பட்ட நேரம்/தேதி போன்ற தகவல்களை மற்ற Facebook நிறுவனங்களுடன் பகிர்வதால், குறிப்பிட்ட ஒரு WhatsApp கணக்கானது Facebook நிறுவனங்களின் மற்றொரு சேவையையும் பயன்படுத்தும் ஒருவருடையதா என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடியும். எங்கள் சேவைகள் குறித்த தகவல்களை மிகவும் துல்லியமாக வழங்கவும், சேவைகளை மேம்படுத்தவும் இது அனுமதிக்கிறது. மற்ற Facebook நிறுவனங்களில் பிற செயலிகள் அல்லது சேவைகளை மக்கள் பயன்படுத்துவதை ஒப்பிடும்போது WhatsApp சேவைகளை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்வோம், சாத்தியமான அம்சங்கள் அல்லது தயாரிப்பு மேம்பாடுகள் குறித்து ஆராய WhatsApp-க்கு இது உதவுகிறது. WhatsApp-இல் எத்தனை தனிப்பட்ட பயனர்கள் உள்ளனர் என்பதையும் எங்களால் கணக்கிட முடியும். உதாரணத்திற்கு, வேறு Facebook செயலிகளை எங்கள் பயனர்கள் யாரெல்லாம் பயன்படுத்தவில்லை என்ற விவரங்களை அறிந்து, Facebook நிறுவனங்கள் முழுவதிலும் தனிப்பட்ட பயனர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதையும் எங்களால் தெரிந்து கொள்ள முடியும். முதலீட்டாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் போன்றவர்களுக்கு உட்பட எங்கள் சேவையில் நடைபெறும் செயல்பாட்டை முழுமையாக அறிக்கையிட WhatsApp-க்கு இது உதவும்.
    • நிலையாக நீடித்திருக்கும் ஒரு பிசினஸைக் கட்டமைப்பதற்கான வழிகளை நாங்கள் ஆராயும் அதே வேளையில் WhatsApp-க்கும் இது உதவுகிறது. உதாரணத்திற்கு, நாங்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, WhatsApp-ஐப் பயன்படுத்தி மக்களும் பிசினஸ்களும் தொடர்புகொள்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம். மற்ற Facebook நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, மக்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள பிசினஸ்களைக் கண்டறிந்து WhatsApp வழியாகத் தொடர்பு கொள்ள உதவும் வழியும் இதில் அடங்கியுள்ளது. இந்த வழியில், Facebook-இல் பயனர்கள் கண்டுபிடிக்கும் பிசினஸ்களுடன் WhatsApp வழியாகத் தொடர்புகொள்ள Facebook வழிவகை செய்கிறது.
  • WhatsApp-ஐயும் மற்ற Facebook குடும்பச் சேவைகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கு.
    • எங்கள் சேவைகளில் ஸ்பேம் மற்றும் முறைகேடான பயன்பாட்டை எதிர்த்துப் போராடவும், சேவைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், எங்கள் சேவைகளிலும் சேவைகளுக்கு வெளியேயும் பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தவும் உதவுவதற்கு, தனியுரிமைக் கொள்கையில் உள்ள “தரவைச் செயலாக்குவதற்கான எங்கள் சட்ட அடிப்படைகள்” எனும் பிரிவுக்கு இணங்க தகவல்களை நாங்கள் மற்ற Facebook நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், அவர்களும் எங்களுக்குத் தகவல்களைப் பகிர்கிறார்கள். உதாரணத்திற்கு, Facebook நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை ஒருவர் சட்டவிரோத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார் என்பதை எங்கள் நிறுவனங்களின் உறுப்பினர்கள் எவரேனும் கண்டறிந்தால், சம்பந்தப்பட்டவர்களின் கணக்கை முடக்க நேரிடும். இது குறித்து மற்ற Facebook நிறுவனங்களுக்கும் அறிவிப்பு வழங்கி அவர்களையும் அவ்வாறே செய்ய இயலச் செய்ய முடியும். இந்த வழியில், எங்கள் சேவை விதிமுறைகளை மீறியதாகவோ எங்கள் பயனர்கள் அல்லது பிறரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவோ முதன் முறையாக அடையாளம் காணப்பட்ட பயனர்கள் தொடர்பான தகவல்களை இந்த நோக்கத்திற்காக மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் நிறுவனங்களின் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் இதுகுறித்த எச்சரிக்கைச் செய்தியை அனுப்புவோம்.
    • WhatsApp மற்றும் பிற Facebook நிறுவனங்களின் சேவைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, Facebook நிறுவனங்கள் முழுவதும் எந்தெந்த கணக்குகள் ஒரே பயனருடன் தொடர்புடையவை என்பதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு செய்வதால், எங்கள் சேவை விதிமுறைகளை மீறும் அல்லது பிறருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயனரை அடையாளம் காணும்போது எங்களால் தகுந்த நடவடிக்கையை எடுக்க முடியும்.
  • Facebook தயாரிப்புகளை Facebook-இல் மேம்படுத்துவதற்கும், பொருத்தமான Facebook விளம்பர அனுபவங்களை வழங்குவதற்கும் தரவை நாங்கள் பகிர்வதில்லை.
    • இன்றளவில், உங்கள் Facebook தயாரிப்பு அனுபவங்களை மேம்படுத்துவதற்கோ Facebook-இல் மேலும் தொடர்புடைய Facebook விளம்பர அனுபவங்களை உங்களுக்கு வழங்குவதற்கோ உங்கள் WhatsApp கணக்குத் தகவல்களை Facebook பயன்படுத்துவதில்லை. இது ஐரோப்பாவில் உள்ள அயர்லாந்து தரவுப் பாதுகாப்பு ஆணையம் மற்றும் பிற தரவுப் பாதுகாப்பு அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் விளைவாகும். WhatsApp மற்றும் மற்ற Facebook நிறுவனத் தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தும் அனுபவத்தை மேம்படுத்துவதற்குப் பல புதிய வழிகளை உருவாக்குவதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எதிர்காலத்தில் இந்த நோக்கத்திற்காக இதுபோன்ற தரவை Facebook நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு நாங்கள் தேர்வுசெய்தால், அவ்வாறு பகிர்ந்து கொள்வதை நடைமுறைப்படுத்துவதற்கான எதிர்கால வழிமுறை குறித்து அயர்லாந்து தரவுப் பாதுகாப்பு ஆணையத்துடன் ஒரு புரிந்துணர்வை எட்டும்போது மட்டுமே நாங்கள் அவ்வாறு செய்வோம். நாங்கள் வழங்கும் புதிய அம்சங்கள் தொடர்பாகவும், தரவை நாங்கள் பயன்படுத்தும் நடைமுறைகள் தொடர்பாகவும் உங்களுக்குத் தொடர்ந்து அறிவிப்போம்.
இந்த நோக்கங்களுக்காக, யாருடைய WhatsApp தகவல்கள் Facebook நிறுவனங்களுடன் பகிரப்படுகிறது?
WhatsApp-இன் அனைத்துப் பயனர்களும் அவர்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்த விரும்பினால் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறோம். Facebook பயனர்கள் அல்லாத WhatsApp பயனர்களும் இதில் இடம்பெற்றிருக்கக்கூடும். ஏனெனில் எங்கள் பயனர்கள் அனைவருக்கும் தகவல்களைப் பகிரும் திறன் எங்களுக்கு இருக்க வேண்டும். தேவைப்பட்டால், Facebook நிறுவனங்கள் வழங்கும் மதிப்புமிக்க சேவைகளை அவர்கள் பெறுவதற்காகவும், எங்கள் தனியுரிமைக் கொள்கை மற்றும் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவும் இவ்வாறு செய்வோம்.
எல்லாச் சூழல்களிலும், இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான குறைந்தபட்சத் தகவல்களை மட்டுமே நாங்கள் பகிர்ந்து கொள்வோம். மிகச் சமீபத்திய தகவல்களையே நாங்கள் பகிர்கிறோம் என்பதை உறுதிசெய்கிறோம். உதாரணத்திற்கு, உங்கள் WhatsApp மொபைல் எண்ணை மாற்றுவதற்கு நீங்கள் முடிவெடுத்தால், அந்த எண்ணை எங்களிடமிருந்து பெற்ற எங்கள் Facebook குடும்ப உறுப்பினர்களும் அதைத் தங்கள் பதிவுகளில் மாற்றிவிடுவார்கள்.
மிக முக்கியமாக, உங்கள் WhatsApp தொடர்புகளை Facebook அல்லது Facebook நிறுவனங்களின் வேறு எந்த உறுப்பினர்களுடனும் தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்காக WhatsApp பகிர்வதில்லை, அவ்வாறு பகிரும் எந்தத் திட்டமும் இல்லை.
எனது WhatsApp தகவல்களை Facebook நிறுவனங்கள் பயன்படுத்துவது குறித்து எனக்கு என்ன தேர்வுகள் உள்ளன?
எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி, செயலியில் உள்ள “எனது கணக்கை நீக்கு” என்ற அம்சத்தின் மூலம் உங்கள் கணக்கை நீக்கிக் கொள்ளலாம். உங்கள் Facebook கணக்கை நீக்கினால் WhatsApp-ஐ நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துவது எவ்வாறு பாதிக்கப்படாதோ அதுபோலவே, உங்கள் WhatsApp கணக்கை நீக்குவதால் பிற Facebook நிறுவனங்கள் வழங்கும் பிற செயலிகள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான உங்கள் திறன் பாதிக்கப்படாது. உங்கள் WhatsApp கணக்கை நீக்கும்போது என்ன நடக்கிறது என்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, WhatsApp-இன் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.
இது உங்கள் கேள்விக்குப் பதிலளித்ததா?
ஆம்
இல்லை