உங்கள் கணக்கை நீக்குவது எப்படி?

ஆண்ட்ராய்டு
iOS
KaiOS
WhatsApp-இல் இருந்தபடியே உங்கள் கணக்கை நீக்கிக் கொள்ளலாம். உங்கள் கணக்கை நீக்கிவிட்டால், அதைத் திரும்பப் பெற முடியாது. தற்செயலாக நீக்கிவிட்டாலும் கூட, அதை எங்களால் திரும்ப வழங்க முடியாது.
உங்கள் கணக்கை நீக்க:
 1. WhatsApp-ஐத் திறக்கவும்.
 2. மேலும் விருப்பங்கள்
  more options
  > அமைப்புகள் > கணக்கு > எனது கணக்கை நீக்கு என்பதைத் தட்டவும்.
 3. முழு சர்வதேச வடிவமைப்பில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு எனது கணக்கை நீக்கு என்பதைத் தட்டவும்.
 4. கீழ்தோன்றும் மெனுவில், உங்கள் கணக்கை ஏன் நீக்குகிறீர்கள் என்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
 5. எனது கணக்கை நீக்கு என்பதைத் தட்டவும்.
உங்கள் கணக்கை நீக்கினால்:
 • WhatsApp-இல் இருந்து உங்கள் கணக்கு நீக்கப்படும்.
 • உங்கள் மெசேஜ் வரலாறு அழிக்கப்படும்.
 • உங்கள் WhatsApp குழுக்கள் அனைத்திலிருந்தும் நீக்கப்படுவீர்கள்.
 • உங்கள் Google இயக்கக் காப்புப் பிரதி நீக்கப்படும்.
 • சேனல் நிர்வாகிப் பொறுப்பில் இருந்தோ பின்தொடர்பவராக நீங்கள் இருப்பதையோ அகற்றும். ஆனால் நீங்கள் உருவாக்கிய அறிவிப்புகள், ரியாக்‌‌ஷன்கள், வாக்கெடுப்புகள் போன்ற சேனல் செயல்பாடுகளை அகற்றாது.
உங்கள் கணக்கை நீக்கினால்:
 • உங்கள் கணக்கிற்கான அணுகலை மீண்டும் பெற முடியாது.
 • உங்கள் WhatsApp தகவல்களை நீக்குவதற்கு, நீக்குதல் செயல்முறை தொடங்கிய நாளில் இருந்து 30 நாட்கள் வரை ஆகலாம். உங்கள் தகவல்களின் நகல்கள் 30 நாட்களுக்குப் பிறகும் பேக்அப் சேமிப்பகத்தில் தக்கவைக்கப்படலாம். பேரிடர் நிகழ்வு, மென்பொருள் பிழை, தரவு இழப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் தரவை மீட்டெடுக்க இந்தச் சேமிப்பகத்தைப் பயன்படுத்துவோம். இந்தக் காலத்தின்போது உங்கள் தகவல்கள் WhatsApp-இல் கிடைக்காது.
 • நீங்கள் உருவாக்கிய குழுக்கள் அல்லது பிற பயனர்கள் வைத்திருக்கும் உங்களைப் பற்றிய தகவல்களை (நீங்கள் அனுப்பிய மெசேஜ்களின் நகல் போன்றவை) இது பாதிக்காது.
 • உங்கள் கணக்கை நீக்கிய பிறகும், எங்கள் தரவுத்தளங்களில் சில பதிவுத் தரவை நாங்கள் தக்க வைக்கக்கூடும். ஆனால் அத்தகைய தரவு உங்கள் கணக்குடன் இணைக்கப்பட முடியாத வகையில் எல்லா அடையாள காணக்கூடிய தகவல்களில் இருந்தும் பிரிக்கப்படும். இதைச் செய்ய, வழக்கமான முறையில், இந்தப் பதிவுத் தரவில் இருந்து சில அடையாளம் காணக்கூடிய தகவல்களை நாங்கள் நீக்குவோம். மேலும் உங்கள் கணக்கு ஐடியின் எந்தவொரு நிகழ்வையும் மாற்று அடையாளங்காட்டி கொண்டு மாற்றுவோம். அவ்வாறு மாற்றிய பிறகு உங்கள் கணக்குடன் அதை மீண்டும் இணைக்க முடியாது.
 • சட்டச் சிக்கல்கள், விதிமுறை மீறல்கள் அல்லது தீங்குகளைத் தடுக்கும் முயற்சிகள் போன்றவற்றிற்காகவும் நாங்கள் உங்கள் தகவல்களை வைத்திருக்கலாம்.
 • மேலும் தகவல்களுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.
 • மற்ற Meta நிறுவனங்களுடன் பகிரப்பட்டுள்ள உங்கள் தகவல்களும் நீக்கப்படும்.
உங்கள் கணக்கை நீக்குவதால் சேனல்களின் செயல்பாடுகள் தானாகவே நீக்கப்படாது
WhatsApp சேனலுக்கான உரிமையாளராக நீங்கள் இருந்தால்:
 • உங்கள் சேனலையும் WhatsApp கணக்கையும் நீக்க விரும்பினால், முதலில் உங்கள் சேனலை நீக்கவும்.
 • உங்கள் சேனலும் சேனல் அறிவிப்புகளும் தானாக நீக்கப்படாது.
  • மற்ற சேனல் நிர்வாகிகளை நீங்கள் வைத்திருந்தால் சேனலை நீண்டகாலம் பின்தொடரும் நிர்வாகிக்குச் சேனல் உரிமை மாற்றப்படும்.
  • நீங்கள் மட்டுமே சேனல் நிர்வாகியாக இருந்தால், உங்கள் சேனல் நீக்கப்படும். பின்தொடர்பவர்களுக்கு அறிவிப்புகள் தொடர்ந்து காட்டப்படும். ஆனால் பின்தொடராதவர்களால் உங்கள் சேனலைக் கண்டறியவோ அறிவிப்புகளைப் பார்க்கவோ முடியாது.
 • சேனலில் நீங்கள் பகிர்ந்த அறிவிப்புகளை நீக்க விரும்பினால், அறிவிப்புகளை நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் சேனல் நிர்வாகியாக இருந்தால்:
 • சேனலில் நீங்கள் பகிர்ந்த அறிவிப்புகள் நீக்கப்படாது. சேனலில் நீங்கள் உருவாக்கிய அறிவிப்புகளை நீக்க விரும்பினால், அறிவிப்புகளை நீக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தொடர்புடைய தகவல்கள்:
இது உங்கள் கேள்விக்குப் பதிலளித்ததா?
ஆம்
இல்லை