பிசினஸ் அம்சங்கள் - ஓர் அறிமுகம்

விதிமுறைகளிலும் தனியுரிமைக் கொள்கையிலும் சமீபத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் தனிப்பட்ட செய்திகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்த மாற்றங்கள் WhatsApp-இல் உள்ள விருப்பத்தேர்விலான பிசினஸ் அம்சங்கள் தொடர்பானவை. மேலும், தரவை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் ஆகியவை தொடர்பான கூடுதல் வெளிப்படைத்தன்மையை இவை வழங்குகின்றன.

எவற்றில் மாற்றங்கள் செய்யப்படவில்லை?
உங்கள் தனிப்பட்ட செய்திகள் மற்றும் அழைப்புகளின் தனியுரிமையும் பாதுகாப்பும் தொடர்பாக எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இவற்றை முழு மறையாக்கம் செய்து பாதுகாக்கிறோம், WhatsApp மற்றும் Facebook-ஆல் இவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது. நாங்கள் ஒருபோதும் இந்தப் பாதுகாப்பை பலவீனப்படுத்த மாட்டோம், ஒவ்வொரு அரட்டைக்கும் லேபிளிடுவதால், எங்கள் அர்ப்பணிப்பில் எவ்வித சமரசமும் செய்யமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.
விருப்பத்தேர்விலான பிசினஸ் அம்சங்கள்
ஒவ்வொரு நாளும் பிசினஸ்களுக்குச் செய்தி அனுப்பும் 175 மில்லியன் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்காக உழைத்து வருகிறோம். விருப்பத்தேர்விலான பிஸினஸ் அம்சங்கள் தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள மாற்றங்களானது, பிசினஸுடனான தகவல் தொடர்புகள் அனைவருக்கும் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும், எளிமையாகவும் இருப்பதற்கான எங்கள் பெரும் முயற்சியின் ஒரு பகுதியே. இந்த முயற்சிகளில் இடம்பெற்றிருப்பவை:
  • வாடிக்கையாளர் சேவையை வழங்குதல்: பர்ச்சேஸ் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதல், பர்ச்சேஸ் செய்தல், உதவிகரமான தகவல்களைப் பெறுதல் (எ.கா. ரசீதுகள்) ஆகியவற்றைச் செய்ய பிசினஸ்களுடன் உரையாடுவது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். Facebook பிசினஸ் தயாரிப்புகளைப் பயன்படுத்தக்கூடியவர்கள் பிசினஸ்களுடன் உரையாடுவதை நாங்கள் இன்னும் எளிதாக்குகிறோம். வாடிக்கையாளர்களுக்குப் பதிலளிக்க, Facebook வழங்கும் பாதுகாப்பான ஹோஸ்டிங் சேவைகள் சில பிசினஸ்களுக்குத் தேவை. இந்தச் சேவையை ஒரு பிசினஸ் பயன்படுத்தும்போது, அந்த உரையாடலுக்குத் தெளிவாக லேபிளிடுவோம். இதன் மூலம் அவற்றுக்குச் செய்தி அனுப்புவதா வேண்டாமா என்று நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.
  • ஒரு பிசினஸைத் தேடுதல்: விளம்பரங்களில் காட்டப்படும் ஒரு பொத்தானைக் கிளிக் செய்து, WhatsApp வழியாக செய்தி அனுப்புவதன் மூலம் Facebook அல்லது Instagram-இல் பிசினஸ்களைக் கண்டறியலாம். Facebook-இல் காட்டப்படும் மற்ற விளம்பரங்களைப் போலவே, இந்த விளம்பரங்களைக் கிளிக் செய்யத் தேர்வு செய்தால், Facebook-இல் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக்க இவை பயன்படுத்தப்படலாம். முழு மறையாக்கம் செய்யப்பட்டுள்ள செய்திகளை WhatsApp மற்றும் Facebook-ஆல் பார்க்க முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
  • ஷாப்பிங் அனுபவங்கள் : பலரும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கின்றனர், தூரம் காரணமாக இது இன்னும் அதிகரித்து வருகிறது. Facebook அல்லது Instagram-இல் Shop அம்சத்தை வைத்திருக்கும் சில பிசினஸ்கள், தங்களின் WhatsApp பிசினஸ் சுயவிவரத்திலும் ஷாப்ஸ் அம்சத்தை வைத்திருக்க முடியும். இதன் மூலம், ஒரு பிசினஸின் தயாரிப்புகளை Facebook மற்றும் Instagram-இல் பார்த்து, நேரடியாக அவற்றை WhatsApp-இல் இருந்து வாங்கி விடலாம். ஷாப்ஸ் அம்சத்தின் மூலம் தொடர்பு கொள்ள நீங்கள் தேர்வு செய்தால், Facebook உடன் உங்கள் தரவு எவ்வாறு பகிரப்படுகிறது என்பதை WhatsApp-இல் உங்களுக்குத் தெரிவிப்போம்.
இதுபோன்ற தன்விருப்ப அம்சங்கள் குறித்தும் Facebook உடன் இணைந்து எவ்வாறு பணியாற்றுகிறோம் என்பது குறித்தும் மேலும் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இது உங்கள் கேள்விக்குப் பதிலளித்ததா?
ஆம்
இல்லை