நடைமுறைப்படுத்தும் தேதியைப் பற்றி

நடைமுறைப்படுத்தும் தேதியில் என்ன நிகழும்?
இந்தப் புதுப்பிப்பை நிறுவுவதால், மே 15 அன்று யாருடைய WhatsApp கணக்கும் நீக்கப்படாது அல்லது அதன் செயல்பாட்டை இழக்க மாட்டார்கள்.
நடைமுறைப்படுத்தும் தேதிக்குப் பிறகு என்ன நிகழும்?
புதுப்பிப்பைப் பார்த்த பெரும்பான்மையான பயனர்கள் அதை ஏற்றுக்கொண்டதைக் கருத்தில் கொண்டு, புதுப்பிப்பைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும் ஓர் அறிவிப்பை WhatsApp-இல் காண்பிப்போம். அதைப் படித்துப் பார்ப்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் வாய்ப்பில்லாதவர்களுக்கு நினைவூட்டலையும் அனுப்புவோம். இந்த நினைவூட்டல்களைத் தொடர்ந்து காட்டுவதற்கோ செயலியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவதற்கோ தற்போது எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை.
செயலியில் இருந்தே புதுப்பிப்புகளை நேரடியாக ஏற்காதவர்களுக்கு, அவற்றை ஏற்பதற்கான பிற வாய்ப்புகளும் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, யாராவது WhatsApp-இல் மீண்டும் பதிவுசெய்யும்போதோ இந்தப் புதுப்பிப்புடன் தொடர்புடைய ஓர் அம்சத்தை யாராவது முதன்முறையாக பயன்படுத்த விரும்பினாலோ அவ்வாறான வாய்ப்புகள் வழங்கப்படும்.
உங்கள் அரட்டை வரலாற்றை Android அல்லது iPhone-இல் தரவிறக்கிக் கொள்ளலாம் மற்றும் உங்கள் கணக்கின் அறிக்கையைத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  • உங்கள் அரட்டைகளைத் தரவிறக்கிக் கொண்டு, உங்கள் கணக்கின் அறிக்கையையும் நீங்களாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். உங்கள் கணக்கின் அறிக்கையைத் தரவிறக்குவதற்கோ உங்கள் கணக்கை நீக்குவதற்கோ உதவி தேவைப்பட்டால், எங்களை இங்கே தொடர்புகொள்ளலாம்.
புதுப்பிப்பை நீங்கள் ஏற்கவில்லை என்றால், உங்கள் கணக்கை WhatsApp நீக்காது.
  • செயலில் இல்லாத பயனர்கள் தொடர்பான எங்களின் நடப்புக் கொள்கை பொருந்தும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.
  • Android, iPhone அல்லது KaiOS மொபைல்களில் உங்கள் கணக்கை நீக்க விரும்பினால் அதுகுறித்து நீங்கள் மீண்டும் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறோம். உங்கள் கணக்கை நீக்குவது, உங்கள் செய்தி வரலாற்றை அழித்துவிடும், எல்லா WhatsApp குழுக்களிலிருந்தும் உங்களை நீக்கிவிடும் மற்றும் உங்கள் WhatsApp காப்புப்பிரதிகளையும் நீக்கிவிடும். இதனால் அதன்பிறகு எங்களால் எதுவும் செய்ய இயலாது.
இது உங்கள் கேள்விக்குப் பதிலளித்ததா?
ஆம்
இல்லை